சென்னை மாநகராட்சியில் பாஜகவுக்கு முதல் வெற்றி; உமா ஆனந்த் தேர்வு

சென்னை மாநகராட்சியில் பாஜகவுக்கு முதல் வெற்றி; உமா ஆனந்த் தேர்வு
X

உமா ஆனந்த் 

சென்னை மாநகராட்சியில் பாஜகவுக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. அக்கட்சியின் உமா ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.

சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலம் மேற்கு மாம்பலம் 134-வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்ட உமா ஆனந்த் வெற்றிபெற்றுள்ளார். இவர், 5 ஆயிரத்து 539 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். சென்னை மாநகராட்சி தேர்தலில் பாஜக பெற்ற ஒரே வெற்றி இதுவாகும்.

உமா ஆனந்த், தன்னை கோட்சேவின் பேத்தி என்றும், ஜாதிகள் தேவை என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்தார். இவருக்கு பாஜக சீட் தந்தபோது, விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் அவர் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், மாநகராட்சி 137 வது வார்டில், திமுக சார்பில் போட்டியிட்ட விருகம்பாக்கம் தனசேகரன், தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரது வித்தியாசம் 10,578 வாக்குகள் ஆகும்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா