காமராஜர் நினைவிடத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மரியாதை
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. பைல் படம்
முன்னாள் முதல்வர் காமராஜரின்46 வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள காமராஜரின் நினைவு மண்டபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்;
தமிழ்நாட்டு அரசியல் காமராஜர் கொண்டு வந்த வழியில் இருந்து அப்பட்டமாக மாறி இருப்பதை நம்மால் காண முடிகிறது காங்கிரஸின் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பலமுறை சென்னை வந்தனர் ஆனால் காமராஜர் நினைவிடத்தில் ஒருமுறைகூட அஞ்சலி செலுத்தியதில்லை.
காமராஜரின் நினைவிடம் சரியாக பராமரிக்கப்படாமல் உள்ளது எனவும் நீங்கள் செய்யவில்லை என்றால் எங்களிடம் ஒப்படையுங்கள் அடுத்த வருடம் இதே இடத்தில் மக்கள் இயக்கமாக மாற்றி மாபெரும் மணிமண்டபத்தை கட்டி அவருடைய வாழ்க்கை வரலாற்றை மக்களுக்கு காட்டுகிறோம்.
தமிழக அரசு எல்லா தலைவருக்கும் 39 கோடி செலவில் மணிமண்டபம் கட்டுவது ஏற்புடையது அதேபோல் காமராஜர் போல் பெரும் தலைவரை இருட்டடிப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. என்று குற்றம் சாட்டினர்.
பாஜக யாரைப் பார்த்தும் அஞ்சவில்லை நானும் யாருக்கும் அஞ்சவில்லை.ஒரு பலம் வாய்ந்த தலைவராக ஸ்டாலின் மாறவில்லை முதல்வரின் காவல் நிலைய திடீர் ஆய்வு முன் கூட்டியே ஏற்பாடு செய்த ஆய்வு என்றும்போட்டோஷாப் செய்துவிட்டு அவர்களே சமூக வலைதளங்களில் பதிவிட்டு அவர்கள் சொந்த தொலைக்காட்சியில் 100 நாள் சாதனை என்று விளம்பரம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
எதிர்க்கட்சியாக நல்ல வேலை செய்யும் போது நாங்கள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுப்போம். மார்பிங் செய்த போட்டோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பிரதமர் மோடியை குறை செல்வதற்கு பீட்டர் அல்போன்ஸ் வெட்கபட வேண்டும்.
இதேபோல் போலிப் பிரச்சாரங்கள் இந்தியாவில் எடுபடாது. பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர நாங்கள் முயற்சிக்கும்போது மாநில அரசு ஒப்புதல் வழங்க வேண்டும்.
பெட்ரோல் விலையை வைத்து திமுக அரசு செய்யும் டிராமைவை நிறுத்திக்கொள்ள வேண்டும். இளைஞர்கள் அரசியலில் வருவதற்கு தயாராக உள்ளனர்.
காமராஜர் போல் ஆட்சி தருவதற்கு களம் தயாராகி விட்டது.அரசியல்வாதிகள் இதுவரை தயாராக உள்ள இளைஞர்கள் தயாராகிவிட்டனர். மேலும் திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் வேலை செய்யும் நண்பர்கள் மீண்டும் பள்ளி கல்லூரிக்கு சென்று படித்துவிட்டு வந்து வேலை பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu