பாரதி நினைவு நூற்றாண்டு விருது, தலா ரூ. 3 லட்சம் வழங்கிய முதலமைச்சர்

பாரதி நினைவு நூற்றாண்டு விருது, தலா ரூ. 3 லட்சம் வழங்கிய முதலமைச்சர்
X

பாரதி நினைவு நூற்றாண்டு விருது  மற்றும் விருதுத்தொகையாக தலா 3 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை,  தமிழறிஞர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டு விருது, தலா 3 இலட்சம் ஆகியவற்றை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

இன்று மகாகவி பாரதியாரின் பிறந்த தினம். அவரது நினைவைப் போற்றும் வகையில், அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மகாகவி பாரதியின் வாழ்க்கை குறித்தும், அவரின் படைப்புகள் குறித்தும் ஆய்வு செய்த, மூத்த ஆய்வாளர்களான மறைந்த பெ.தூரன் , ரா.அ.பத்மநாபன் , தொ.மு.சி.ரகுநாதன், இளசை மணியன் ஆகியோரின் நினைவாக, அவர்களது குடும்பத்தாருக்கும், மூத்த ஆய்வாளர்களான சீனி விசுவநாதன், பேரா. முனைவர் ய . மணிகண்டன் ஆகியோருக்கும், தலா மூன்று லட்சம் ரூபாயும், விருதும், பாராட்டு சான்றிதழும் அரசால் வழங்கி கவுரவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மகாகவி பாரதியார் மூத்த ஆய்வாளர்களான சீனி விசுவநாதன் மற்றும் பேராசிரியர் முனைவர் ய.மணிகண்டன் ஆகியோருக்கு 'பாரதி நினைவு நூற்றாண்டு விருது' மற்றும் விருதுத்தொகை தலா 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள், முதலமைச்சர் வழங்கினார்.

Tags

Next Story
ai healthcare technology