வாக்குப்பெட்டிகள் 5 முறை சோதனை: டிஜிபி திரிபாதி உத்தரவு

வாக்குப்பெட்டிகள் 5 முறை சோதனை: டிஜிபி திரிபாதி உத்தரவு
X

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் இவிஎம் இயந்திரங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள மையங்களைத் தினசரி 5 முறை போலீசார் ஆய்வு செய்ய வேண்டும் என டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மேலும், இவிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உள்ளூர் போலீசாருடன் இணைந்து துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினரும், ஆயுதப்படை காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இவிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் தினசரி குறைந்தபட்சம் 5 முறையாவது போலீஸ் அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும் என டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!