ஆயுத பூஜை விடுமுறை: குறைவாக கூட்டம் காணப்பட்ட கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்

ஆயுத பூஜை விடுமுறை: குறைவாக கூட்டம் காணப்பட்ட கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்
X

கோயம்பேடு பேருந்து நிலையம்.

சென்னை கோயம்பேடு பேருந்துநிலையத்தில் ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு வழக்கத்திற்கு மாறாக குறைவாக பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு வழக்கத்திற்கு மாறாக குறைவாக பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை கொண்டாடும் விதமாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 3,000 சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சிறப்பு பேருந்துகள் மூலம் கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்கள் சொந்த ஊர் புறப்பட்டு செல்லும் நிலையில், நள்ளிரவிலும் ஏராளமான மக்கள் சொந்த ஊர் செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்ததால் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட சற்று குறைவாகவே காணப்பட்டது.

பயணிகளின் வருகையை பொறுத்து பேருந்துகள் இயக்கப்பட்டதால் பேருந்து நிலையம் வந்த மக்கள் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் மூலம் சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இந்த ஆண்டு தாம்பரம் மற்றும் பூந்தமல்லி பகுதியில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இதனால் பேருந்து இருக்கைகள் நிரம்பும் வரை ஓட்டுநர்கள் நீண்ட நேரம் காத்திருந்து வாகனத்தை எடுத்தார்கள்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!