30 பேர் இருக்கீங்களா? தடுப்பூசி மையம் ரெடி - சென்னை மாநகராட்சி

30 பேர் இருக்கீங்களா? தடுப்பூசி மையம் ரெடி - சென்னை மாநகராட்சி
X
நிறுவனமோ, குடியிருப்பு நலச்சங்கமோ 30க்கும் மேற்பட்ட நபர்களை ஒருங்கிணைத்தால் தடுப்பூசி முகாம் அமைத்துத் தரப்படும்

சென்னை மாவட்டத்தில் தடுப்பூசி போடும் எண்ணிக்கையை அதிகரிக்க சென்னை மாநகராட்சி முழுவீச்சில் இறங்கியுள்ளது. சென்னையில் மட்டும் நேற்றைய நாள் வரை 245 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். நேற்று 11,312 பேருக்கும், மே 15 அன்று 19,776 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பின்னர் துணை ஆணையர் ஆல்பி ஜான் ( சுகாதாரம்) தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வேண்டுகோளாக வைத்துள்ளார்.

அதில் நீங்கள் வசிக்கும் இடத்தில் உங்களால் தடுப்பூசி போட 45 வயதுக்கு மேல் உள்ள 30 பேரை ஒருங்கிணைக்க முடியுமா? ஒரு நிறுவனம், அடுக்குமாடிக் குடியிருப்பு நலச் சங்கம் அல்லது எந்தவொரு குழுவும் 30க்கும் மேற்பட்ட (45 வயதுக்கு மேற்பட்ட) நபர்களை அணி திரட்ட முடிந்தால், தயவுசெய்து இந்தப் படிவத்தை நிரப்பவும். @chennaicorp.. அங்கு ஒரு தடுப்பூசி முகாமை அமைத்துத் தரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai marketing future