ஏப்ரல் 15 தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவுப்பு!
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வழியாக நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்வி நிலையங்களில் படிக்கும் இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஏப்ரல் 22ம் தேதி வரை அனைத்து தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும். செய்முறைத் தேர்வுகள் மார்ச் 31-ம் தேதிக்குள் நேரடி முறையில் நடத்தி முடிக்க வேண்டும் என கல்லூரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல் மாணவர்கள் அறிக்கை (Project Report), vivo - voce போன்றவற்றை ஆன்லைனிலேயே நடத்தப்படும். மேலும் மாணவர்களை நேரடியாக அழைத்துத் தேர்வு நடத்த முடியாவிட்டால் முன் அனுமதி பெற்ற பின்னர் நடத்தலாம். B.E., B.Tech., மாணவர்கள் வழங்கப்பட்ட 30 நாட்கள் காலக்கெடுவுக்குள் அறிக்கை சமர்ப்பிக்காவிட்டால் குறிப்பிட்ட பாடத்தில் தேர்ச்சி பெறாதவராக கருதப்படுவார்கள். அதேபோல் M.E.,M.Tech., அறிக்கை சமர்பிக்க வழங்கப்பட்ட 60 நாட்களில் முடிக்கவேண்டும். இல்லையென்றால் அவர்களும் குறிப்பிட்ட பாடத்தில் தேர்ச்சி பெறாதவராக கருதப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu