தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம் : முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம் : முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு
X

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்ட பீட்டர் அல்போன்ஸ் (பைல் படம்)

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்சை நியமனம் செய்து முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பேணிக் காத்திடவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் , கடந்த 1989 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 13 ஆம் நாள் அன்று அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது.

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருவதாகவும், இந்த ஆணையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருத்தியமைத்து , அதன் தலைவராக எஸ் . பீட்டர் அல்போன்ஸை நியமித்து உத்தரவிட்டுள்ளார்

Tags

Next Story
ai as the future