கொரோனாவால் இறந்த சுகாதாரத்துறையினருக்கு நிவாரண தொகை அறிவிப்பு: அமைச்சர் தகவல்
கொரோனா காலத்தில் இறந்த சுகாதாரத்துறையினருக்கு விரைவில் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
கொரோனா காலத்தில் இறந்த சுகாதாரத்துறையினருக்கு விரைவில் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ள சுகாதாரத்துறையினரை விரைவில் பணி நியமணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் இறந்த சுகாதாரத்துறையினருக்கு நிவாரணத் தொகை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு நான்கு பேருக்கு தரப்பட்டுள்ளது.
மேலும், எத்தனை பேருக்கு தர வேண்டும் என்ற கணக்கெடுப்பு நடைபெறுகிறது. அதன்படி முழுமையாக கணக்கெடுப்பு நடைபெற்று முடிந்தவுடன் அவர்கள் அனைவருக்கும் விரைவில் நிவாரணத்தொகை நிச்சயமாக வழங்க வழங்கப்படும். இதனையடுத்து, தேசிய திட்டப்பணிகள் குழுமம் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ள சுகாதாரத்துறையினரை விரைவில் பணி நியமணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu