ராமச்சந்திர ஆதித்தனாரின் 8-ஆம் ஆண்டு நினைவு நாள்: தமாக மாநில தலைவர் மரியாதை

ராமச்சந்திர ஆதித்தனாரின் 8-ஆம் ஆண்டு நினைவு நாள்: தமாக மாநில தலைவர் மரியாதை
X

பைல் படம்

ராமச்சந்திரஆதித்தனாரின் 8 ம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவரது உருவ படத்திற்கு தமாக மாநிலதலைவர் ஜி.கே. வாசன் மாலை அணிவித்தார்

ராமச்சந்திர ஆதித்தனாரின் 8ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை ஆயிரம் விளக்கு மலை முரசு அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவ படத்திற்கு தமாக மாநில தலைவர் ஜி.கே. வாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசியதாவது; அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது அவரது பெருமைக்குரியது. அரசு போக்குவரத்து கழகங்கள், குடிநீர், மின்சாரம், தேயிலை வாரியம் போன்றவற்றில் பணி புரியும் ஊழியர்கள் கொரானாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு போனசாக 25% வழங்க வேண்டும் என தமிழகஅரசை வலியுறுத்துகிறோம். ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. இயற்கையான முறையில் நடைபெறாமல் செயற்கையான முறையில் நடைபெற்றுள்ளது. இது போன்ற தேர்தல் இனிமேலும் நடைபெற கூடாது என்றார் ஜி.கே.வாசன்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி