அரியர் தேர்வு தேதி வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்

அரியர் தேர்வு தேதி வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்
X
கல்லூரி மாணவா்களுக்கான அரியர் தேர்வுகள் மே 17ஆம் தேதி முதல் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கல்லூரி தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டும், ஒத்திவைக்கப்பட்டும் வருகிறது. இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை தொழில்நுட்பக் கல்லூரி (எம்ஐடி), கட்டடக்கலை மற்றும் திட்டமிடுதல் பள்ளி ஆகிய 4 வளாகக் கல்லூரிகள் செயல்படுகின்றன.

இந்தக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு நவம்பா்- டிசம்பரில் நடத்த வேண்டிய பருவத்தேர்வு கடந்த பிப்ரவரி- மாா்ச் மாதங்களில் நடத்தப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பா் அரியா் தேர்வு மற்றும் இந்த ஆண்டு அரியா் தேர்வு ஆகிய இரண்டும் மே 17ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

எனினும், பிப்ரவரி 1 முதல் மாா்ச் 4 வரை இணையவழித் தேர்வு நடைபெறுவதாக இருந்த மாணவா்களுக்கு மட்டுமே இந்தத் தேர்வு அட்டவணை பொருந்தும் என அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.

மற்ற மாணவா்களுக்கான தேர்வு அட்டவணை பின்னா் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!