magalir urimai thogai scheme மகளிர் உதவித் தொகை எப்போது கிடைக்கும்!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களா நீங்கள்? கவலையை விடுங்க.. ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாம்களில் நீங்களும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலமாக பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இதற்கான விண்ணப்பங்களையும் வழங்கிட ஏற்பாடு செய்தது அரசு. இதிலும் விடுபட்டவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்ப தலைவிகள் மற்றும் தகுதி வாய்ந்த மகளிர்கள் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே நடைபெற்ற முகாம்களில் பதிவு செய்ய இயலாத குடும்ப தலைவிகள் மூன்று நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் வகையில் திட்டம் ஒன்றை அறிவித்திருந்தது தமிழக அரசு. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்துக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது வருகின்றன.
இதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. முதற்கட்ட முகாம் ஜுலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெற்றது.
இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போது வரை ஒரு கோடியே 54 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உரிய நாளில் விண்ணப்பம் பதிவு செய்ய வர முடியாத நபர்களுக்கு என்று தனியாக சிறப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த முகாம்கள் நாளை முதல் துவங்க இருக்கின்றன.
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதிகள் மற்றும் தகுதியின்மைகள் குறித்த அரசாணை முன்னதாகவே வெளியிடப்பட்டிருந்தது. இதில் பல முக்கியமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. மேலும் கடுமையாக உடல் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் மாற்றுத்திறனாளி என அங்கீகரிக்கப்பட்டவர்கள், பராமரிப்பு உதவித் தொகை பெறும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கும் விண்ணப்பங்களை வழங்கி அவர்களும் இந்த உதவித் தொகையை பெறத் தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய்த் துறையின் கீழ் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் ஒய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் இருந்தாலும் அவர்களது குடும்பங்களுக்கும், இந்தத் திட்டத்தில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது வருவாய்த் துறையின் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் ஒரு பெண்ணாக இருக்கும்பட்சத்தில் அவரைத் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த மற்ற பெண்களும் (ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்களில் ஒருவர்) கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறும் வகையில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்தில் யாரேனும் ஒரு நபர், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களிலும், அமைப்புசாரத் தொழிலாளர் நல வாரியத்திலும் முதியோர் ஓய்வூதியம் பெற்றதால், அக்குடும்பத்தில் உள்ள பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறலாம் என விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ரூ. 1000 பெண்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுவது குறித்து முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி ஒரு கோடி மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது. உழைக்கும் பெண்களுக்கான அங்கீகாரமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது, என்று அறிவித்துள்ளார்.
மேலும், இந்த திட்டத்தின் மூலம் ரூபாய் 1000 நேரடியாக மகளிரின் வங்கி கணக்கில் வரும் செப்டம்பர் மாதம் செலுத்தப்பட உள்ளது. முதல் மாதத் தொகை செப்டம்பர் இறுதியில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu