பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள், டீசல் 33 காசுகள் விலை உயர்வு

தமிழகத்தில் தொடர்ந்து 5வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக, பெட்ரோல் - டீசல் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 100.01 ரூபாய், டீசல் லிட்டர் 96.60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னை நகரில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி பெட்ரோல் ஒரு லிட்டர் 101.27 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல், டீசல் விலையும் லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து, 96.93 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ச்சியாக 5-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவது, வாகன ஓட்டிகள், நடுத்தர குடும்பத்தினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags

Next Story
ai healthcare products