சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாநகராட்சி நிர்வாகம் புதிய திட்டம்

சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாநகராட்சி நிர்வாகம் புதிய திட்டம்
X
சென்னையில் மக்கள் தினமும் சந்திக்கும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாநகராட்சி நிர்வாகம் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

சென்னையில் மொத்தம் 387 கி.மீ. நீளத்தில் 471 முக்கிய பேருந்து சாலைகள் உள்ளன. அத்துடன் 5 ஆயிரத்து 270 கி.மீ. நீத்திற்கு 34 ஆயிரத்து 640 நகர் உட்புற சாலைகள் உள்ளன. எப்போதும் பரபரப்பாக இயக்கம் சென்னை மாநகரத்தில் மக்கள் நாள்தோறும் சந்திக்கும் சிக்கல் போக்குவரத்து பிரச்னை. சென்னையில் போக்கு நெரிசலை தவிர்க்க பல வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது அரசு. இந்த முறை மாநகராட்சி நிர்வாகம் சரியான ஒரு முடிவை எடுத்துள்ளது.

வழக்கமாக சாலைகளில் தூய்மை பணிகளை பகலில் செய்வார்கள். பகலில் சாலைகளில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் போது, போக்குவரத்து நெரிசலால் பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுகிறது.

இதனை தவிர்க்க, சென்னையில் அனைத்து தூய்மை பணிகளும் இரவு நேரங்களிலேயே முடிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. நாள்தோறும் மேற்கொள்ளப்படும் இந்த சாலைகளில் தூய்மை பணிகளின் போது 200 வார்டுகளிலும் சுமார் 5 ஆயிரம் டன் அளவிளான குப்பைகள் நாள்தோறும் சேகரிக்கப்படும், இந்த குப்பைகளை கொண்டு செல்ல நிறைய வாகனங்களை பகலில் பயன்படுத்துகிறது. இதனால் குப்பைகள் அகற்றப்படும்போதும் பேருந்து மற்றும் உட்புற சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

இந்நிலையில், சாலைகளிலும், உட்புற சாலைகளிலும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை பணி மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்களின் சார்பில் இரவு நேரங்களில் தூய்மை பணி தீவிரமாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது தூய்மை பணி மேற்கொள்ளும் போது போக்குவரத்து இடையூறு ஏற்படுவதை தடுக்கும் வகையில் திடக்கழிவு மேலாண்மை துறையின் மூலம் பேட்டரியால் இயங்கும் 255 வாகனங்கள், 53 மூன்று சக்கர வாகனங்கள், 23 டிப்பர் லாரிகள் மற்றும் 1,786 தூய்மை பணியாளர்களும் பணியமர்த்தப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளில் கூடுதல் வாகனங்கள் மற்றும் பணியாளர்களை கொண்டு அனைத்து தூய்மை பணிகளையும் இரவு நேரங்களிலேயே முடித்து பொதுமக்களின் போக்குவரத்துக்கு எந்தவித இடையூறுமின்றி பணிகளை நிறைவேற்ற மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil