/* */

சென்னையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை கொருக்கு பேட்டையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

சென்னையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி
X
சென்னையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணி பை வழங்கப்பட்டது.

சென்னையில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் கெளரவ தலைவரும் முன்னாள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுமான நீதியரசர் எம். கற்பகவிநாயகம் அவர்களின் வழிகாட்டுதலின்படி பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் பாதிப்புகள் பிளாஸ்டிக் பைகளில் நாம் வாங்கும் உண்ணும் உணவு பொருட்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எப்படி உடல் நிலை பாதிப்படைகிறார்கள், நாம் பயன்படுத்தியபிறகு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளால் நீர் நிலைகள், விவசாய நிலம், குடிநீர், எப்படி பாதிக்கிறது, இதனால் சுற்றுச்சூழல் மாசடைந்து மனிதகுலம் முதல் விலங்குகள், பறவைகள் வரை அனைத்து உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன.


எனவே நாம் மக்காமல் இருக்கின்ற பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மக்கும் வகையிலான பைகளை பயன்படுத்தி நம்மையும் நம் குழந்தைகளையும் விலங்கு மற்றும் பறவைகளையும் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கை மற்றும் மக்கும் வகையிலான பைகளை வழங்கி விழிப்புணர்வு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ் பூங்கொடி, சித்ரா கிருஷ், பார்த்திபன், வினோத் பிரபு, வழக்கறிஞர் முருகன் மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர். ஏ. தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மக்கும் வகையிலான பைகள் மற்றும் விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கினர்.

Updated On: 20 Feb 2023 1:28 PM GMT

Related News

Latest News

 1. அரசியல்
  செல்லூர் ராஜூ நகர்வின் பின்னணி என்ன?
 2. தேனி
  என்னை தாண்டி தொட்டுப்பார்...! பிரதமர் மோடி ஆவேசம்....!
 3. தேனி
  விபத்தில் அதிபர் மரணம்...இனி என்ன ஆகும் ஈரான்?
 4. திருத்தணி
  முருகன் கோவிலில் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா சாமி தரிசனம்!
 5. திருவள்ளூர்
  திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு!
 6. பொன்னேரி
  பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு
 7. மாதவரம்
  பாடியநல்லூரில் புத்த பூர்ணிமா விழா
 8. ஈரோடு
  கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி
 9. கலசப்பாக்கம்
  விவசாயிகள் நீர்ப்பாசனத் துறை அலுவலகத்தை முற்றுகை
 10. கும்மிடிப்பூண்டி
  பெரியபாளையத்தில் 108 பெண்கள் பால்குடம் ஊர்வலம்