அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் ரூ 8 கோடியே 74 இலட்சம் மதிப்பீட்டில் புதிய வளாகம்

அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில்  ரூ 8 கோடியே 74 இலட்சம் மதிப்பீட்டில் புதிய வளாகம்
X

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (4.4.2022) சென்னை , அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி வளாகத்தில், 8 கோடியே 74 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆறு குளிர் சாதன வசதியுடன் கூடிய மிடுக்கு வகுப்பறைகள் மற்றும் 15 குளிர் சாதன வசதியுடன் கூடிய விடுதி அறைகள் அடங்கிய இரண்டு புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், நிதி மற்றும் அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் / அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி இயக்குநர் வெ. இறையன்பு இ.ஆ.ப., பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, இ.ஆ.ப., மனிதவள மேலாண்மைத் துறைச் செயலாளர் மைதிலி க. இராஜேந்திரன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture