சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 11 ஆயிரம் பேருக்கு ஆஞ்சியோ சிகிச்சை

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 11 ஆயிரம் பேருக்கு ஆஞ்சியோ சிகிச்சை
X

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபெற்ற உலக இருதய நாளையொட்டி நோயாளிகளுடன் உரையாடிய மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் பி.பாலாஜி

World Heart Day -பதப்படுத்தப்பட்ட உணவுகள் குளி‌‌ர்பானங்களில் உள்ள உயர் ட்ரை கி‌‌‌‌‌ளிசராய்ட் அளவு மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது

World Heart Day - சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனயில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் சுமார் 6 ஆயிரம் பேருக்கு 'ஆஞ்சியோ சிகிச்சை' மேற்கொள்ளப்பட்டுள்ளது என மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் பி.பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக இருதய தின விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இருதயவியல் துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் கே கண்ணன் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மருத்துவமனை முதல்வர் டாக்டர் பி.பாலாஜி இதய நோய் சிகிச்சை பெற்று குணமடைந்த நோயாளிகளிடம் நலம் விசாரித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

11 ஆயிரம் பேருக்கு ஆஞ்சியோகிராம் :

கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி கூறியதாவது, இதயப் பூர்வமாக இருதய நோயைத் தடுப்போம் என்பது இந்த ஆண்டு முழக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவ மனையில் இருதய சிகிச்சைக்கான 'கேத் லேப்' தொடங்கப்பட்டு சுமார் மூன்றரை ஆண்டுகளில் சுமார் 11 ஆயிரம் பேருக்கு 'ஆஞ்சியோகிராம்' பரிசோதனை மற்றும் 'ஆஞ்சியோ பிளாஸ்ட்' சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவீன கருவிகளுடன் கூடிய இவ்வகைச் சிகிச்சை களுக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிகமான தொகை செலவு செய்ய வேண்டிய நிலையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கட்டணம் ஏதுமின்றி முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் உதவியுடன் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இருதய நோயால் மாரடைப்பு ஏற்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே இருதய நோய் குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்நோயைக் கட்டுப்படுத்துவதுதன் உலக இருதய நாள் கொண்டாடப்படுவதன் முக்கிய நோக்கம்

2020 ஆம் ஆண்டு உலக அளவில் இருதய நோயால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கும் எ‌ன் ஆ‌ய்‌வி‌ல் தெ‌ரியவ‌ந்து‌ள்ளது.இந்தியா‌வி‌ல் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இறப்பிற்கு இருதய நோயே காரணமாக உள்ளது. இதன் அடிப்படையில் உலக இருதய தினமான இன்று இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் இதயத்துக்காக கவனம் செலுத்த வேண்டிய நல்ல நேரம் இது. இந்திய நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் இதய நோய்கள் காரணமாக ஏற்படும் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. அதிலும் 40 வயதுக்கு உட்பட்டவர்களே இந்த பட்டியலில் இருக்கின்றனர்.மரபணு ரீதியாக ஏற்பட்டு வந்த இருதய நோய் இப்போது நாம் கையாளும் பழக்க வழக்கங்களால் வாழ்க்கை முறைப்படியான நோயாக மாறியுள்ளது.

இதய நோயிலிருந்து தப்பிக்க வல்லுனர்கள் ஐந்து வழிமுறைகளை பின்பற்ற வழிவகுகின்றனர்.அவை, தொலைக்காட்சி பார்ப்பதை குறைக்க வேண்டும்; தொலைக்காட்சி முன் குறைந்த நேரத்தையே செலவிட வேண்டும். நாளொன்றுக்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் தொலைக்காட்சியை பார்ப்பவர்களுக்கு 125 சதவீதம் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. உயர் ‌புரூ‌க்டோஸ் உணவுகளை தவிருங்கள்; பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் குளி‌‌ர்பானங்களில் உள்ள உயர் ட்ரை கி‌‌‌‌‌ளிசராய்ட் அளவு மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

புகையை தவிர்க்கவும் ; புகை பழக்கம் இதயத்தின் தமனிகளை பாதித்து குறுகலாக செய்கிறது. புகை இலையில் உள்ள கார்பன் மோனாக்சைடு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை குறைக்கிறது. இதனால் ரத்த அழுத்த பிரச்சனை ஏற்படும், இவை நாளடைவில் பெரிய பாதிப்பை கொண்டுவரும். மேலும் புகை பிடிப்பவரின் அருகில் இருப்பதையும் தவி‌ர்பது அவசியம்.

நல்ல தூக்கம்; தூக்கமின்மை என்பது மனதளவிலும் உடலளவிலும் உபாதைகளை கொண்டு வரும். மேலும் இருதய தமனிகளில் கால்சியம் அளவை அதிகரிக்க செய்யும். இதனால் ‌பிளேக், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும்.உடற்பயிற்சி அவசியம்; ஒவ்வொரு நாளும் ஒரு அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்து வந்தாலே இருதய நோய் வருவதிலிருந்து 60 சத‌வீத‌ம் தப்பிக்க முடியும்.

உணவு மிக முக்கியமானது, ஏனென்றால் உணவு எப்போதும் மருந்தாக கருதப்படுகிறது. ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுப்பது ஆரோக்கியமான இதயத்திற்கு அவசியம். காய்கறிகள் மற்றும் பழங்கள், பச்சைப் பயறு (பருப்பு), பருப்பு வகைகள், முழு தானியங்கள், பாதாம், அக்ரூட் பருப்புகள் போன்றவற்றை உங்கள் உணவில் சேர்க்கவும். உணவில் கருப்பு மிளகு மற்றும் மஞ்சள் போன்றவற்றையும் சேர்க்கவும்.

பல ஆராய்ச்சிகளின் படி, வழக்கமான தியான பயிற்சி உங்களை இதய நோய்களிலிருந்து ஓரளவுக்கு பாதுகாக்கும். தியானம் நம் மனதை அமைதியாக வைத்திருக்கிறது. இது நிகழ்காலத்தில் கவனம் செலுத்த உதவுகிறது. மனதிற்கு ஓய்வு அளிக்கிறது. மன அழுத்தத்தை நீக்குவதுடன், நம் இதயத்தின் அழுத்தத்தையும் குறைக்கிறது. தியானம் உங்கள் இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

உடற்பயிற்சி மற்றும் யோகா; தொடர்ந்து 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது உங்கள் இதயத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், நச்சுகளை வெளியேற்றவும் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. யோகா பயிற்சியினால் சுவாசத்தை மேம்படுத்துதல், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல், இதயத் துடிப்பை மேம்படுத்துதல், கெட்ட கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துதல் மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பது போன்றவற்றின் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

அளவுக்கு அதிகமான மது அருந்துதல், புகைபிடித்தல், சீரற்ற உணவு பழக்கங்கள், கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுதல், மரபுவழி காரணிகள் உள்ளிட்டவைகளால் இருதய நோய்கள் ஏற்படுகின்றன. எனவே சீரான உணவு பழக்கங்களுடன் தினசரி உடற்பயிற்சி யைக் கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும். புகை பிடிக்கும் பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும். இந்நோயை தொடக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்றார் டாக்டர் பாலாஜி.

நிகழ்ச்சியில் இருதயவியல் தலைவர் டாக்டர் கே.கண்ணன், துணைக் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார், கல்லூரி துணை முதல்வர் டாக்டர் ஜமீலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!