ஊரடங்கில் அம்மா உணவகங்கள் செயல்படும்

ஊரடங்கில் அம்மா உணவகங்கள் செயல்படும்
X
தமிழகத்தில் முழு ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்த உத்தரவின்படி, முழு ஊரடங்கு காலத்தில் கடைகள் திறக்கப்பட மாட்டாது. அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். நியாய விலைக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!