சென்னையை குளிர்வித்த கோடை மழை: மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த மக்கள்!

சென்னையை குளிர்வித்த கோடை மழை: மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த மக்கள்!
X
மழை கோப்பு படம்
சென்னையில் இன்று மாலை 5 மணியளவில் பெய்த கோடை மழை மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க வைத்துள்ளது.

சென்னையில் இன்று காலை 10 மணியளவிலேய அக்னி வெயில் கடுமையாக வாட்டி வதைத்தது. பகல் 12 மணிக்கு பயங்கரமான தாக்குதலை நடத்தியது. எப்போது தான் கோடை காலம் முடியுமோ என்று மக்கள் ஏங்கினர்.

இந்தநிலையில் இனறு மாலை 5 மணியளவில் திடீரென சென்னையில் கனமழை கொட்டியது. சென்னை அம்பத்தூர், அண்ணாநகர், மதுரவாயல், சேப்பாக்கம், திரு.வி.க.நகர், கொளத்தூர், தாம்பரம், குரோம்பேட்டை, திருவேற்காடு, ஆலந்தூர், ராயபுரம், சைதாப்பேட்டை, தி.நகர், திருவொற்றியூர், துறைமுகம், பெரம்பூர், மதுரவாயல், மயிலாப்பூர், மாதவரம், வில்லிவாக்கம், வேளச்சேரி, வண்டலூர், ஆதம்பாக்கம், பட்டாபிராம், போரூர், முகப்பேர்,நொளம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

இதனால் சென்னையில் வெப்பம் குறைந்தது. மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!