சமூக, அரசியல், சூழலியல் வழக்குகளைக் கையாண்ட மக்கள் வழக்கறிஞர் வெற்றிச் செல்வன்
மக்கள் வழக்கறிஞர் வெற்றிச் செல்வன்
பல்வேறு சமூக, அரசியல், சூழலியல் வழக்குகளைக் கையாண்ட மக்கள் வழக்கறிஞர் வெற்றிச் செல்வன். பூவுலகின் நண்பர்கள் அமைப்பில் சுற்று சூழலை பாதுகாப்பதில் முனைப்பாக செயல்படுபவர்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ள அரியவகை உயிரினங்களை காக்க, தூர்வாருதல், குப்பைகளை கொட்டுதல் ஆகியவற்றிக்கு தடை விதிக்க இவர் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியது.
இயற்கை பேரிடர், பாதிக்கப்படும் விளிம்பு நிலை மக்களுக்கான தீர்வுகள் பற்றிய இவரது சிந்தனைகளும் செயல்பாடுகளும் பாராட்டத்தக்கது. பேரிடர் காலங்களில் விளும்பு நிலை மக்களை காக்க செய்ய வேண்டியவை குறித்து வழக்கறிஞர் வெற்றிச் செல்வன் செய்யும் விழிப்புணர்வு சிறப்பானது.
பெருகி வரும் தொழிற்சாலை மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு வசதிகளால் காற்று மாசுபாடு அதிகரிப்பது மனித சுகாதாரத்தை கடுமையாக பாதிக்கிறது. காற்று மாசு இந்தியர்களின் வாழ்வை குறைக்கிறது என்பதால், தமிழ்நாட்டில் காற்றின் தரத்தினை நிகழ் நேரத்தில் கணிக்கவும் முன்னெச்சரிக்கை அறிவிப்பதற்காகவும் பூவுலகின் நண்பர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
இந்தியாவின் முதல் "ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம்" அமைப்பதற்கான அரசாணை இவர்களது முயற்சியால் தமிழகத்தில் வெளியிடப்பட்டது.
நல்ல நிகழ்வுகளுக்கு பொன்னாடை போர்த்த வேண்டாம், மலர் செண்டு கொடுக்க வேண்டாம் "புத்தகம் பரிசளிப்போம்" என்ற செயல்பாட்டை நண்பர்களிடமும், மக்களிடமும் எடுத்துச்சொல்லி செயல்படுத்தி வருபவர்.
டெல்லியின் காற்று மாசுபாட்டிற்கு தொழிற்சாலை உமிழ்வே அதிகக் காரணம் ஆகும், இந்தியாவில் மொத்த 167 அனல் மின் நிலையங்களில் 8 அனல்மின் நிலையங்களில் மட்டுமே சல்பர் டை ஆக்சைடு கட்டுப்படுத்தும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. என்ற விபரங்களை கூறும் வெற்றிச்செல்வன், நெகிழி ஒழிப்பைத் தீவிரப்படுத்த மஞ்சப்பை இயக்கம் குறித்து மக்களிடம் ஏற்படுத்தும் விழிப்புணர்வு மிகவும் பாராட்ட தக்கது.
மனிதநேயம், சுற்றுச்சூழல், பல்லுயிர்களை காத்தல், வருங்கால சந்ததிக்கு இந்த பூமிகளை நஞ்சில்லாத பூமியாக அளிக்க வேண்டும் என்ற கொள்கைகளில் தளராமல் செயல்பட்டு வரும் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் பணி மகத்தானது, மிகவும் தேவையானது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu