சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
X

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த அதிமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக அரசை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதிமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத தி.மு.க. அரசை கண்டித்து இன்று அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது

பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைக்கவும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்கவும், வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்குப் போதுமான இழப்பீடு அளிக்கவும், பொங்கல் விழாவை கொண்டாட உதவும் வகையில் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகை அளிக்கவும், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை எதிர்த்தும், மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத தி.மு.க. அரசை கண்டித்து இன்று அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. சென்னை தென்மேற்கு மாவட்ட செயலாளர் ஆதிராஜாம் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.

இதில் அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலர்கள், பகுதி, செயலர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், முன்னாள் கவுன்சிலர்கள், வட்ட செயலாளர்கள், இளைஞர்- இளம்பெண் பாசறை நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!