அதிமுக எதிரி கட்சியாக இல்லாமல், ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக செயல்படும்
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
சென்னையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.:
அதிமுக எதிரி கட்சியாக இல்லாமல் நல்ல பல திட்டங்கள் பெற ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக செயல்படும் கொரோனா நோய் தொற்று இல்லாத ஒரு நாடாக நம் நாடு இருக்க உழைத்து கொண்டிருக்கிறோம்
2019 ம் ஆண்டு டிசம்பரில் என்ன வைரஸ் என்றே தெரியாத ஒரு சூழலில் தமிழகத்தில் மருத்துவத் துறையில் வலுவான ஒரு கட்டமைப்பை அதிமுக அரசு உருவாக்கியது
கொரோனா கட்டுப்பாட்டில் தற்போது நேற்று முதல் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது ஆனால் நாம் இன்னும் கவனமாக இருக்க வேண்டிய தேவை இருக்கிறது. கோவிட் க்கு பிறகு கொரோனா மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்
மூன்றாவது அலை வருமா வராதா என மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். எனவே சுகாதார கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி மூன்றாவது அலையை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்
குறிப்பாக 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இதுவரை தடுப்பூசி போடவில்லை. குழந்தைகள் நல மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் 1 லட்சம் படுக்கைகளை தயார் நிலையில் வைத்து கொள்ள வேண்டும். தடுப்பூசி போடுவதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்
தடுப்பூசி போட 6 கோடி பேர் இலக்கு நிர்ணயித்து இதுவரை ஒரு கோடி பேருக்கு மட்டுமே முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இரண்டு தவணைகள் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் 24 லட்சம் பேர் மட்டுமே. என்வே தடுப்பூசி போடும் திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும்
முகக் கவசம் அணிவதில் இன்னும் விழிப்புணர்வு இல்லாத நிலையை மக்களிடையே நாம் பார்க்க முடிகிறது எனவே தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கிறது
நீட் எதிர்ப்பு கொள்கையில் அதிமுக அரசு உறுதியாக இருக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் நீட் தேர்வு கடந்த ஆண்டில் நடைபெற்றது.
இந்த ஆண்டு நீட் தேர்வு தமிழகத்தில் இருக்கிறதா இல்லையா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டுகிறேன் நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த இட ஒதுக்கீட்டில் தற்போதைய அரசின் நிலை என்ன என்பதையும் அறிய விரும்புகிறேன் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu