அதிமுகவின் தூண்டுதலால் வருமானவரி சோதனை: துரை முருகன் குற்றச்சாட்டு

அதிமுகவின் தூண்டுதலால் வருமானவரி சோதனை: துரை முருகன் குற்றச்சாட்டு
X
அதிமுகவின் தூண்டுதலின் பேரிலேயே திமுக வேட்பாளரின் வீட்டில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்றதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

ஸ்டாலின் ஒரு எதிர்கட்சித் தலைவர், 2 மாதத்துக்கு பிறகு தமிழ்நாட்டை ஆளப்போகிறவர் என்ற மரியாதை கூட இல்லாமல் அவர் தங்கியிருந்த அறைகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. தோல்வி பயம் காரணமாகவே அதிமுக இதனை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது.

தேர்தல் களத்தில் வெல்ல முடியாது என்று அதிமுகவும் பாஜகவும் வருமானவரித்துறையை தூண்டிவிட்டு அரசியல் உள்நோக்கத்தோடு வருமானவரித் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த சோதனைகள் எல்லாம் பாஜகவுக்கு எதிரான வாக்குகளாக மாறும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்