/* */

மின் வாரியத்தை அதிமுக சீரழித்து விட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

திருவாரூரில் முதல் சூரிய சக்தி மின் பூங்கா அமைக்கப்பட உள்ளது. விவசாயிகள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்

HIGHLIGHTS

மின் வாரியத்தை அதிமுக சீரழித்து விட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
X

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்(பைல்படம்

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்வாரியத்தை சீரழித்ததால் மக்கள் பெரும் அவதி அடைந்தனர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டினார்.

சென்னை: தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார்.சென்னை அண்ணா நூலகத்தில் நடைபெற்ற விழாவில், விவசாயிகளுக்கு ஒரு லட்சம் புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் முகமாக, விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புக்கான சான்றுகளை முதல்வர் வழங்கி திட்டத்தைத் தொடக்கி வைத்தார்.

தமிழகத்தில் விவசாய மின் இணைப்புக்காக பதிவு செய்து காத்திருக்கக் கூடியவா்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 52,777. குறிப்பாக கடந்த 2003-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை மட்டுமே விவசாயத்துக்கு இலவசமாக மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏப்.1-ஆம் தேதி முதல் விண்ணப்பித்தவா்கள் தற்போது வரை காத்திருக்கின்றனா்.அதே போல், தத்கல் திட்டத்தின் கீழ் பணம் செலுத்தியவா்களும் காத்திருக்கின்றனா். முறையே ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் கட்டணம் செலுத்தி, பல பிரிவுகளில் விண்ணப்பித்து, நுகா்வோா் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனா். தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக ஆட்சி உழவர்களுக்கானது.4.5 லட்சம் விவசாயிகள் விண்ணப்பித்த நிலையில் முதல் கட்டமாக 1 லட்சம் பேருக்கு இணைப்பு தர திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை 4 மாதத்தில் நிறைவேற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்வாரியத்தை சீரழித்துள்ளனர். ஆனால் 4 மாதத்திலேயே ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு தரும் திட்டத்தை தொடங்கி உள்ளோம். 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக மத்திய அரசை எச்சரிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நிகழ்ச்சி நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக அமைச்சர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு பணியாற்றுகின்றனர். ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். விவசாயிகளின் முகத்தில் சிரிப்பை காணும் வகையில் ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கப்படுகிறது.

விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் புதிய மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. இந்தியாவிலேயே விரைவாக செயல்படும் அரசு தமிழக அரசு தான். மின்சார வாரியத்தை செழிப்பாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருவாரூரில் முதல் சூரிய சக்தி மின் பூங்கா அமைக்கப்பட உள்ளது. புதிய மின் இணைப்பு பெற்றுள்ள விவசாயிகள் மின்சாரத்தை தேவைக்கேற்ப சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Updated On: 23 Sep 2021 3:43 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்