கூடுதல் டி.ஜி.பிக்கு கொரோனா தொற்று

கூடுதல் டி.ஜி.பிக்கு கொரோனா தொற்று
X

தெற்கு மண்டல கூடுதல் டி.ஜி.பி ஆபாஷ்குமாருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக காவல் துறையில், தென் மண்டல கூடுதல் டி.ஜி.பி.,யாக ஆபாஷ்குமார் பணிபுரிந்து வருகிறார். இவர், சில தினங்களாக, காய்ச்சலில் அவதிப்பட்டு வந்தார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, சென்னை கிண்டி கிங்ஸ் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி