நடிகை சாந்தினி விவகாரம் - ராமநாதபுரத்தில் மணிகண்டன் மனைவி புகார்- ஆண்கள் பாதுகாப்பு சங்கம் முதலமைச்சருக்கு கடிதம்
நடிகை மீது அமைச்சர் மணிகண்டனின் மனைவி வசந்தி, ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்..
எனது குடும்ப வாழ்க்கையைச் சிதைக்கும் நோக்கத்தோடும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் நோக்கத்தோடும் என் கணவர் மீது பொய்யான புகாரை நடிகை கொடுத்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகார் மனு, சென்னை அடையாறு காவல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டிருக்காம்.
அதே சமயத்துல தமிழ்நாடுஆண்கள்பாதுகாப்பு சங்க தலைவர் அருள்துமிலன் நம்ம முதலமைச்சருக்கு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி அளித்துள்ள புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டதை, தமிழ்நாடுஆண்கள் பாதுகாப்பு சங்கம் வரவேற்கிறது அப்படின்னு ஒரு பெரிய கடிதம் அனுப்பி இருக்காம்.
அந்த கடிதம் இதுதான்..
அனுப்புனர்:
டி.அருள்துமிலன்,
வழக்கறிஞர்
தலைவர்தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம்,
சென்னை.
பெறுநர்:
மாண்புமிகு தமிழ்நாடுமுதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு அரசு,
சென்னை
பொருள்- முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி அளித்துள்ள புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டதை, தமிழ்நாடுஆண்கள் பாதுகாப்பு சங்கம் வரவேற்கிறது அதே நேரம் நடிகை சாந்தினி மீது, தமிழ்நாடு அரசு தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என்று ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுக்கிறது
அய்யா
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்பதை நன்கு அறிந்தும் அவருடன் நெருங்கிப் பழகி மூன்று முறை கருக்கலைப்பு செய்ததாக நடிகை சாந்தினி கூறியுள்ளார் இவர் ஒரு குடும்பத்தைப் பிரிக்க திட்டமிட்டு கூட்டுசதி செய்ததும் பின்னர் அதைப் பயன்படுத்தி மிரட்டல் விடுத்ததும் தெரியவருகிறது. எனவே அவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இது போன்ற கள்ளத்தொடர்புகளால் தமிழ்நாட்டில் ஏற்படும் கொலைகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது இதனால் பல குழந்தைகள் சமூக இழிச்சொல்லுக்கு ஆளாக்கப்பட்டு அநாதைகள் ஆகிறார்கள் இதன் காரணமாக, கள்ளத்தொடர்பில் ஈடுபடும் ஆண் – பெண் இருவருக்கும் கடுமையான சமமான தண்டனை கிடைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும். இந்திய தண்டனை சட்டம் 497 கள்ளத்தொடர்பு உச்சநீதிமன்றம் ரத்து செய்து விட்டது. இது கள்ளத்தொடர்பு தவறில்லை என பொதுமக்கள் தவறாக எண்ணும்படி செய்துவிட்டது.
உண்மையிலேயே உச்சநீதிமன்றம், ஆங்கிலேய காலத்து பழமையான சட்டப்பிரிவு 497ஐ ரத்து செய்து விட்டு இந்த காலச்சூழலுக்கு ஏற்றவாறு, புதிதாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு வலியுறுத்தியது . அது நடைமுறைக்கு வரவில்லை இந்த சூழ்நிலையில், நடிகைகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் சில பெண்கள் பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் தொழில்
அதிபர்களின் நட்பை தேடிச்சென்று ஏற்படுத்திக்கொண்டு மகிழ்ச்சியாக வாழும் அந்தக் குடும்பத்தினரைப் பிரித்து மிரட்டி பணம் பறிக்கும் செயல் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெறுகிறது எனவே இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு காலம் தாமதிக்காமல் கள்ளத் தொடர்பில் ஈடுபடும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கடுமையான தண்டனை தரும் வகையில் உரிய அவசர சட்டம் இயற்ற வேண்டும்.
இப்படிக்கு
டி. அருள்துமிலன், வழக்கறிஞர்,
சென்னை
+919840870807
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu