தமிழ்நாடு முழுவதும் அதிரடி சோதனை; ரூ.31 லட்சம் பறிமுதல்

தமிழ்நாடு முழுவதும் அதிரடி சோதனை; ரூ.31 லட்சம் பறிமுதல்
X

லஞ்ச ஒழிப்புத்துறை  அலுவலகம். (பைல் படம்)

தமிழ்நாடு முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்ட சோதனையில் ரூ.31 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் 38 அரசு அலுவலகங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனையை மேற்கொண்டது.

சென்னை, மதுரை, நாகை, திருவண்ணாமலை, திருச்சி, அரியலூர், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, சிவகங்கை, விழுப்புரம், ஈரோடு உட்பட பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனையை மேற்கொண்டது.

சேலம் உடையாப்பட்டியில் உள்ள மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம், நெல்லை டவுன் இரண்டாம் எண் இணை சார்பதிவாளர் அலுவலகம், மயிலாப்பூர் சப்.ரிஜிஸ்டர் அலுவலகம், திருவான்மியூர் ஆர்.டி.ஓ அலுவலகம் என பல இடங்களில் இந்த சோதனை தொடர்ந்தது.

இதன் முடிவில், ரூ.26.99.335 கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தனது அறிக்கையில் தெரிவித்தது. இதன் முடிவில், ரூ.26.99.335 கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தனது அறிக்கையில் தெரிவித்தது.

இந்நிலையில், இந்த சோதனையில் கூடுதலாக ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் கைப்பற்றப்பட்ட ஒட்டுமொத்த தொகை ரூ.31,45,055ஆக அதிகரித்துள்ளது.

Tags

Next Story
Will AI Replace Web Developers