கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் 70% இலக்கினை அடைய உள்ளோம் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியதில் 70 சதவிகிதம் இலக்கினை எளிதில் அடையவிருக்கிறோம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது : இந்திய அளவில் தமிழகம் தடுப்பூசி செலுத்துவதில் 8 அல்லது 9 இடத்தில் இருக்கிறது. கடந்த கால அதிமுக ஆட்சியில் ஜனவரி 16 அன்று தொடங்கப்பட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் சரியாக நடைபெறவில்லை. இதய நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ள இதுபோன்ற மருத்துவமனைகள் தொடர்ந்து சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டு வருகின்றனர். இதய நோய்களுக்கான மருத்துவமனைகள் சென்னையில் பல இடங்களில் திறக்கப்பட்டு வருகின்றன. மெட்வே ஹார்ட் இன்ஸ்ட்டியூட் மருத்துவமனையில் அதிநவீன கருவிகளுடன் கூடிய மருத்துவமனையாக விளங்கி வருகிறது.
முதல்வர் ஒவ்வொரு முறை கொரோனா தளர்வுகள் அறிவிக்கிறபோதும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தத் தவறுவதில்லை. முகக்கவசம் அணிவதில் தொடங்கி கொரோனா காலத்து விதிமுறைகளைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தி வருகிறார். செவிலியர்கள் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மூன்று பேர் கொண்ட குழு அமைத்து அவர்களுடன் கலந்து பேசி 15 நாட்களில் தீர்வு காண வலியுறுத்தப்பட்டுள்ளது. போராட்டம் நடத்தியதற்கு வருத்தமும் தெரிவித்திருக்கிறார்கள். 4,900 செவிலியர்களைப் புதியதாக எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தச் செவிலியர்களில் இவர்களுக்கும் முன்னுரிமை கொடுப்பதற்குத் தெரிவித்திருக்கிறோம்.
6 சதவிகிதம் அளவுக்கு 4 லட்சத்து 34 ஆயிரம் தடுப்பூசிகளை வீணடித்துள்ளனர். ஆனால், மே 7க்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வரின் தீவிர நடவடிக்கைகளுக்குப் பிறகு இன்றுவரை 5 கோடியே 29 லட்சம் பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 18 வயதுக்கு உட்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தியதில் 67 சதவிகிதம் பேருக்கு இதுவரை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்னும் 10 நாட்களில் உலக சுகாதார நிறுவனம் ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளவாறு 70 சதவிகிதம் என்ற இலக்கினை அடைய இருக்கிறோம், இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu