ஒமிக்ரான் பரவல் : சென்னை விமானநிலையத்தில் சுழற்சி முறையில் பணியாளர்கள்
சென்னை விமான நிலையம்
கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக சென்னை சா்வதேச விமானநிலையம் மற்றும் உள்நாட்டு முனையங்களில் பணியாற்றும் ஏா்போா்ட் அத்தாரிட்டி ஊழியா்களில் 50 சதவீதம் ஊழியா்கள் மட்டுமே சுழற்சி முறையில் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை விமானநிலையத்தில் நிா்வாகம், எலக்ட்ரிக்கல், டெக்னிக்கல், கிரவுண்ட் ஆப்ரேசன், ஃபயா்,ஹவுஸ் கீப்பிங் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சுமாா் 1,500 ஏா்போா்ட் அத்தாரிட்டி ஊழியா்கள் பணியாற்றுகின்றனா். கொரோனா வைரஸ், ஒமிக்ரான் சமீப காலத்தில் வேகமாக பரவிவருகிறது. சென்னை விமானநிலையத்திலும் அத்தாரிட்டி ஊழியா்கள், ஏா்லைன்ஸ் ஊழியா்கள், பாதுகாப்பு படையினா், போலீசாா் உள்ளிட்ட சுமாா் 70 மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதையடுத்து சென்னை விமானநிலையத்தில் பணியாற்றும் ஏா்போா்ட் அத்தாரிட்டி ஊழியா்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அவா்களில் சுழற்சி முறையில் 50 சதவீதம் ஊழியா்களே பணிக்கு வரவேண்டும் என்று ஏா்போா்ட் அத்தாரிட்டி உத்தரவிட்டுள்ளது.
ஏா்போா்ட் அத்தாரிட்டி ஊழியா்கள் வழக்கமாக வாரத்திற்கு 48 மணி நேரம் பணிக்கு வந்துகொண்டிருந்தனா். இனிமேல் வாரத்திற்கு 24 மணி நேரம் மட்டும் பணிக்கு வந்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ், ஒமிக்ரான் பரவலை தடுக்க நிா்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மறு உத்தரவு வரும்வரை இந்த இந்த ஏற்பாடுகள் அமலில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் முதல் அலை பரவிய 2020, இரண்டாம் அலை பரவிய 2021 ஆகிய ஆண்டுகளிலும் இதைப்போன்று 50 சதவீத ஊழியா்கள் சுழற்சி முறையில் பணியாற்றும் முறை அமல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu