9 தொழிற்சாலை அமையும் இடங்கள்

தமிழகத்தில் புதியதாக தொடங்கப்படும் தொழிற்சாலையை காணொளி காட்சியின் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முதலீட்டாளர்களின் முதல் முகவரி நிழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துெகாண்டு 34 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். அதன்படி, தமிழகத்தில் காஞ்சிபுரம், புதுக்கோட்டை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அமையும் 9 தொழிற்சாலைகளின் விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அமையும் தொழிற்சாலைகள் விவரங்கள்:
1.காஞ்சிபுரம் வல்லம் வடகாலில் ரூ.1,700 கோடியில் ஏஜி அண்டு மிரதாம் ரசாயன தொழிற்சாலை
2.சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் ரூ.876 கோடியில் டிசிஎஸ் பேஸ்-2 தகவல் தொழில்நுட்ப நிறுவனம்
3.வாலாஜாபாத்தில் ரூ.621 கோடி முதலீட்டில் காற்று விசையாளிகளுக்கான கியர்பெட்டிகள் தயாரிக்கும் காற்றாலை கம்பெனி
4.காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.125 கோடியில் சூப்பர் ஆட்டோ போர்ச் நிறுவனம் அமைக்கும் எந்திர உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை
5.ஸ்ரீபெரும்புதுாரில் ரூ.320 கோடி முதலீட்டில் குரித் இந்தியா தனியார் காற்றாலை உதிரிபாக தொழிற்சாலை
6.புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.200 கோடியில் லிவியா தனியார் பாலிமர் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை
7.ஓசூரில் ரூ.150 கோடியில் ஐநாக்ஸ் ஏர் தனியார் கம்பெனி தயாரிக்கும் திரவ மருத்துவ ஆக்சிஜன் தொழிற்சாலை
8. ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் ரூ.138 கோடியில் மருத்துவ கையுறைகள் தயாரிக்கும் கம்பெனி
9. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.120 கூபிக் மாடுலர் சிஸ்டம் நிறுவனத்தின் மின்சார இணைப்புகள் தயாரிக்கும் தொழிற்சாலை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu