தமிழகத்தில் இன்று நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 73.27 சதவீத வாக்குகள் பதிவு

தமிழகத்தில் இன்று நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 73.27 சதவீத வாக்குகள் பதிவு
X
தமிழக ஊரக உள்ளாட்சி 2ம் கட்டத் தேர்தலில் 73.27 சதவீதம் வாக்குப்பதிவாகி இருப்பதாக மாநில தலைமை தேர்தல் ஆணையம் தகவல்

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரையில் நடந்தது.

மொத்தம் 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 1,324 ஊராட்சித் தலைவர்கள், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் இதர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 130 உள்ளாட்சி பதவிகளுக்கும் மொத்தமாக இன்று வாக்குப்பதிவு நடந்தது. இன்று நடந்த தேர்தலில் 73.27 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாநில தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மாவட்ட வாரியான வாக்குப்பதிவு சதவிகித விவரம்:

1.காஞ்சிபுரம்: 72%

2.செங்கல்பட்டு: 70%

3.விழுப்புரம்: 83.6%

4.கள்ளக்குறிச்சி: 82%

5.வேலுார்: 68%

6.ராணிப்பேட்டை: 75.3%

7.திருப்பத்துார்: 73.5%

8.திருநெல்வேலி: 65%

9.தென்காசி: 70%

மொத்தம்: 73.27%

Tags

Next Story
Weight Loss Tips In Tamil