அரை நூற்றாண்டைக் கடந்த அதிமுக..! பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு..!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (கோப்பு படம்)
அதிமுக தொடங்கப்பட்டு 52ஆண்டுகள் நிறைவடைந்து 53வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கவுள்ளது. அதையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் மற்றும் ஆந்திரா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களிலும் கொண்டாடப்படவுள்ளது.
இதையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது :
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்டு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் போற்றி வளர்க்கப்பட்ட, மாபெரும் மக்கள் பேரியக்கமான அதிமுக, அக்.17ம் தேதி 53ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.
இதையொட்டி 17ம் தேதிமுதல் 20ம் தேதிவரை பொதுக்கூட்டங்கள், கட்சி ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற இருக்கிறது.
அதன்படி, 17-ம் தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், பிற மாநிலங்களிலும், ஆங்காங்கே எம்ஜிஆர், ஜெயலலிதா உருவச் சிலைகளுக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்து, ஏழை, எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.
பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அக்.17ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் 20ம் தேதி திருநெல்வேலி புறநகர் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் நான் பங்கேற்று உரையாற்ற உள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu