5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி

5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி
X
தமிழகத்தில் 5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதன்படி, நெல்லை மாநகர காவல் ஆணையர் அன்பு, தென்மண்டல ஐ.ஜி ஆகவும், மத்திய மண்டல ஐ.ஜி தீபக் தாமோர் கோவை மாநகர ஆணையராகவும், சென்னை குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் வித்ய ஜெயந்த் குல்கர்னி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இணை இயக்குநராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையர் பவாணீஷ்வரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு விசாரணை பிரிவு ஐ.ஜி. ஆகவும், நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவீன் குமார் அபிநபு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இணை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!