சென்னையில் 400 காய்ச்சல் முகாம்கள்..! ஆணையர்

சென்னையில் 400 காய்ச்சல் முகாம்கள்..! ஆணையர்
X

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு 400 காய்ச்சல் முகாமினை தொடங்கவுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில் சென்னை தி.நகர் ராமேஸ்வரம் தெருவில் உள்ள காய்ச்சல் சிறப்பு முகாமினை பார்வையிட்ட சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது "நோய் குறித்து ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் சென்னையில் 12 ஆயிரம் தன்னார்வலர்கள், தலைவலி, காய்ச்சல், நுகர்வு தன்மை இல்லாதது குறித்து வீடு வீடாக ஆய்வு செய்து வருவதாகவும் அடுத்த 3 நாட்களுக்கு சென்னையில் 400 காய்ச்சல் முகாமினை தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!