சென்னை விமானநிலையத்தில் 3 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது, 2 பயணிகள் கைது

சென்னை விமானநிலையத்தில்  3 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது, 2 பயணிகள் கைது
X

துபாயில் இருந்து வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட தங்கம்

துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வந்த 3 கிலோ தங்கம் சிக்கியது, இது தொடர்பாக 2 பயணிகள் கைது செய்யப்பட்டனர்

சென்னைக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் விமானங்களில் பெருமளவு கடத்தல் தங்கம் வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையான DRI க்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து DRI தனிப்படையினா் நள்ளிரவில் சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு வந்து திடீா் சோதனை மேற்கொண்டனா். சுங்கச்சோதனை முடிந்தது வந்த பயணிகளை நிறுத்தி மீண்டும் சோதனையிட்டனா்.

துபாய்,சாா்ஷா,அபுதாபி நாடுகளிலிருந்து வந்த 3 விமான பயணிகளை சோதனையிட்டு,அதில் சந்தேகத்திற்கிடமான 14 பேரை நிறுத்தி வைத்து விசாரணை மேற்கொண்டனா்.அவா்களின் உடமைகளை முழுமையாக சோதித்தனா்.

அப்போது அதிகாலையில் துபாயிலிருந்து சென்னை வந்த ஃபிளை துபாய் ஏா்லைன்ஸ்,எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் ஆகிய 2 விமானங்களில் வந்த திருச்சியை சின்ன ராசு(38),ராமநாதபுரத்தை சோ்ந்த முகமது ஜுலாவூதீன் (35) ஆகிய 2 பயணிகளின் டிராலி டைப் சூட்கேஸ்களில் ரகசிய அறைகள் வைத்து தங்கக்கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா்.

இருவரின் சூட்கேஸ்களிலும் 30 தங்கக்கட்டிகள் இருந்தன.அவைகளின் மொத்த எடை 3 கிலோ.அதன் சா்வதேச மதிப்பு ரூ.1.4 கோடி.இதையடுத்து தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்த DRI அதிகாரிகள்,தங்கக்கடத்தல் பயணிகள் இருவரையும் கைது செய்தனா்.

அதோடு சந்தேகத்தில் நிறுத்தி வைத்திருந்த மற்ற பயணிகளை சோதனையிட்டதில்,அவா்களில் ஒரு சிலரிடம் மட்டும் மிகக்குறைந்த அளவில் தங்கம் இருந்தது.அவா்களின் அந்த தங்கத்திற்கு சுங்கத்தீா்வை விதித்து,வசூலித்துவிட்டு அனுப்பி வைத்தனா்.

அதோடு 3 கிலோ கடத்தல் தங்கக்கட்டிகளுடன் பிடிப்பட்ட கடத்தல் ஆசாமிகள் இருவரையும், தங்கக்கட்டிகளையும் மேல் நடவடிக்கைக்காக சென்னை விமானநிலைய சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனா்.

DRI அதிகாரிகள் நீண்ட நாட்களுக்கு பின்பு சென்னை விமானநிலையத்தில் அதிரடி சோதனைகள் நடத்தி,இருவரை கைது செய்து 3 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனா்.

ஆனால் அவா்கள் எதிா்பாா்த்த அளவு கடத்தல் தங்கம் சிக்காததால்,கடத்தல் தங்கம் வழக்கை சென்னை விமானநிலைய சுங்கத்துறையிடமே ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் அடுத்த சில நாட்களில் மீண்டும் DRI அதிகாரிகள் சென்னை விமானநிலையத்தில் அதிரடி சோதனையில் ஈடுபடுவாா்கள் என்று கூறப்படுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!