செங்குந்தர் மகாஜன சங்கத்தின் 200 கோடி சொத்துகள் பாழடைந்தது
திரைப்பட இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேட்டி
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்திற்கு 200 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன , சென்னை மண்ணடி அரண்மனைக்காரன் தெருவில் உள்ள சங்கத்தின் தலைமை அலுவலகமும் , அண்ணாவின் முயற்சியால் வாங்கித் தரப்பட்ட வள்ளல் சபாபதி பள்ளியும் சரியான பராமரிப்பு இல்லாததால் பாழடைந்துள்ளது.
வள்ளல் சபாபதி பள்ளயில் 500 மாணவர்கள் படித்த நிலையில் 100 பேர் மட்டுமே தற்போது படிக்கின்றனர்... இந்த பள்ளியை தனியாருக்கு குத்தகைக்கு விட முயற்சி நடக்கிறது. சமுதாய ஆர்வலர்கள் 5பேரை உள்ளடக்கிய , 10 பேர் கொண்ட சொத்து பாதுகாப்பு குழுவை அமைக்க வேண்டுமென சங்கத் தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் ,
அக்டோபர் 12 ம் தேதிக்குள் எங்களுக்கு பதில் கிடைக்க வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சங்கத்தில் 3 ஆண்டுக்கு ஒருமுறை நிர்வாக ரீதியாக தேர்தல் நடக்கும். 3கோடி டெபாசிட் பணத்தில் தொடங்கப்பட்ட அந்த சங்கம் , 10 ஆண்டுகளாக சங்கம் நட்டத்தில் உள்ளது.
சங்கத்தின் இருப்புத்தொகை ஒன்றேகால் கோடியாக குறைந்துள்ளது. சொத்துப் பாதுகாப்புக் குழு குறித்த எங்களது கோரிக்கை நிறைவேறாவிட்டால் முதலமைச்சரை நேரடியாக சந்திப்போம். அரசியல் பாதிப்பு இல்லாமல் சமுதாய அமைப்பை கொண்டு செல்ல விரும்புகிறோம்.
புத்தூரில் சில ஆண்டுகளுக்கு முன்பு செங்குந்த முதலியார்களிடம் 15 கோடி வரை சிலர் மோசடி செய்தார்கள் ..பின்பு ஏமாற்றிய நபர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து பணத்தை மீட்டுக் கொடுத்தோம்.
தற்போது திருத்தணி பகுதியில் செங்குந்த முதலியார் கிராமங்களில் பெரியளவிலான தொகையை ஒரு நிறுவனம் வாங்கி ஏமாற்றியுள்ளது , அந்த நிறுவனத்தை நடத்துவோர் யார் என்பது தெளிவாக தெரியவில்லை. சங்கம் மூலம் இழந்த பணத்தை மீட்க நடவடிக்கை எடுப்போம் ,
இல்லையென்றால் சட்ட பூர்வமாக அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுப்போம். செங்குந்தர் மகாஜன சங்க தலைமை அலுவலகத்தில் உள்ள 22 அறைகளை வாடகைக்கு விட்டால் மாதம் 3 முதல் 5 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஆனால் 50 ஆயிரம் நட்டத்தில் இந்த கட்டடம் உள்ளது என்று ஆர்.கே.செல்வமணி கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu