மின்வாரியம் சார்பில் கடந்த 10 நாட்களில் 2 லட்சத்தி 71 பராமரிப்பு பணிகள், நடைபெற்றிருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

மின்வாரியம் சார்பில் கடந்த 10 நாட்களில் 2 லட்சத்தி 71 பராமரிப்பு பணிகள், நடைபெற்றிருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
X

அமைச்சர் செந்தில் பாலாஜி ( பைல் படம்)

மின் வாரியம் சார்பில் கடந்த 10 நாட்களில் 2 லட்சத்தி 71 பராமரிப்பு பணிகள் நடைபெற்றிருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் தென் சென்னை மின் மண்டலத்திற்கு உட்பட்ட அதிகாரிகளுடன் மின்வாரிய செயல்பாடுகள் குறித்தான ஆய்வு கூட்டம் சென்னை கோட்டூர் அருகே அமைந்துள்ள அண்ணா நூலகத்தில் நடைபெற்றது.

மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ,சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்ட மன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்,

வேளச்சேரி சட்ட மன்ற உறுப்பினர், ஹசன் மௌலானா, காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் செல்வ பெருந்தகை, சோலிங்கநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், பல்லாவரம் சட்ட மன்ற உறுப்பினர் இ. கருணாநிதி காஞ்சிபுரம் சி.பி.என்.பி. எழிலன்

தாம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.ஆர் ராஜா காஞ்சிபுரம் சட்ட மன்ற உறுப்பினர் க.செல்வம் உத்திரமேரூர் சட்ட மன்ற உறுப்பினர் சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு அவர்களது தொகுதியிலுள்ள குறைகளையும் கோரிக்கைகளையும் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மேடைப்பேச்சு*செந்தில் பாலாஜி அனைத்து அமைச்சர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக செயல்படுகிறார் என்றும், சட்டபேரவையில் புள்ளிவிவர கணக்குகளை தனது விரல் நுனியில் வைத்திருப்பார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் மிகத் துல்லியமாக புள்ளிவிவரங்களுடன் இவர் பதிலளிப்பதை பார்க்கும்போது மிக பிரம்மிப்பாக இருக்கும் என்றும் கூறினார்.

அதன்பின்னர் சென்னை பகுதிகளில் உள்ள மின்வாரியம் சார்ந்த புகார்களை அளிக்க அமைக்கப்பட்ட 195 நபர்கள் பணியாற்றும் கால் சென்டரான மிண்ணகம் இதுவரை 40 ஆயிரத்து 500 புகார்களை பெற்று அதில் 31,500 புகார்கள் சரி செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது.

2 லட்சத்து 28 ஆயிரம் பணிகள் மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணிக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன.ஆனால் 2 லட்சத்து 71 என கூடுதலாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணிகள் பத்து நாட்களில் முடிக்கப்பட்டுள்ளது.

போர்க்கால அடிப்படையில் புதிய இணைப்புக்கான பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும், ஆளுநர் உரையில் குறிப்பிட்டதுபோல கடந்த ஆட்சியில் நடந்த குளறுபடிகள் அனைத்தும் சரி செய்யப்படும் எனவும்

மின் வாரியத்திற்கு ஒரு லட்சத்து 85 ஆயிரம் கோடி வரை கடன் சுமை உள்ளது.அதனால் வருடத்திற்கு 15 ஆயிரம் கோடி வரை வரி கட்ட வேண்டிய சூழல் நிலவுகிறது.

மின் மிகை மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் துறையின் நோக்கம் என கூறினார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!