சென்னை விமான நிலையத்தில் ரூ.18.90 லட்சம் தங்கம் சிக்கியது

சென்னை விமான நிலையத்தில் ரூ.18.90 லட்சம் தங்கம் சிக்கியது
X
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.18.90 லட்சம் மதிப்பிலான 408 கிராம் தங்கம் சோதனையில் சிக்கியது.

துபாயில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து விமானத்தை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனா்.

அப்போது, விமானத்தின் பின்புற கழிவறையில் பொட்டலம் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை திறந்து பார்த்தபோது, அதற்குள் தங்கச் சங்கிலி உள்பட 408 கிராம் தங்கம் இருந்தது கண்டறியப்பட்டது.

சுங்க சட்டத்தின் கீழ் சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது.இதன் மொத்த மதிப்பு ரூபாய் 18.90 லட்சம் ஆகும். மேலும் இதுதொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!