சென்னையில் 3வது மாடியிலிருந்து தவறி விழுந்த 18 மாத குழந்தை சாவு

சென்னையில் 3வது மாடியிலிருந்து தவறி விழுந்த  18 மாத குழந்தை சாவு
X

குழந்தை தவறி விழுந்த மாடி வீடு.

சென்னை மண்ணடியில் 3-வது மாடியில் விளையாடிய 18 மாத பெண் குழந்தை தவறி விழுந்து உயிரிழந்தது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை மண்ணடி இப்ராகிம் சாகிப் 2-வது தெருவைச் சேர்ந்தவர் செல்வகணி. இவர் பர்மா பஜாரில் கடை வைத்துள்ளார். இவரது மனைவி யாஸ்மின். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களின் மூன்றாவது குழந்தை ஆசியா பெயர்.

பிறந்து 18 மாதமேயாகும் பச்சிளங் குழந்தையான ஆசியா, நேற்று இரவு மூன்றாவது மாடி பால்கனியில் விளையாடி கொண்டிருந்திருக்கிறாள். பால்கனி கம்பியில் ஏறி நின்று விளையாட முயற்சித்துள்ளார் குழந்தை ஆசியா. அப்போது எதிர்பாராவிதமாக அந்த நேரத்தில் 3-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.

இதனால் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. குடும்பத்தினர் ஆசியாவை மீட்டு சிகிச்சைக்காக மண்ணடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு ஆசியா உயிரிழந்தார்.

Tags

Next Story
ai in future agriculture