சென்னை விமான நிலையத்தில் 1.55 கிலோ தங்கம் பறிமுதல்
எலெக்ட்ரிக் குக்கரில் கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல செய்யப்பட்டது
துபாயில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் சிறப்பு விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்
அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி கொண்டு வந்த எலக்ட்ரிக் ரைஸ் குக்கர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த எலக்டிரிக் ரைஸ் குக்கரை திறந்து பார்த்த போது, அதனுள் வட்டவடிவமான தங்க கட்டி மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதன் எடை 300 கிராம். மதிப்பு ரூ.13.70 லட்சம். இதையடுத்து சுங்க அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்ததோடு, கடத்தல் பயணியை கைது செய்தனர்.
இந்நிலையில் சார்ஜாவில் இருந்து வந்த ஏா் அரேபியா ஏர்லைன்ஸ் விமான பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டதில், சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி, உள்ளாடைக்குள் 290 கிராம் தங்க பசையை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடித்து.அதையும் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.13.5 லட்சம்.
இதற்கிடையே சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம் அருகே இருந்த 2 குப்பைத் தொட்டிகளை,விமானநிலைய தூய்மை பணியாளா்கள்,சுத்தப்படுத்தினா். அப்போது குப்பை தொட்டிகளுக்குள் மறைத்து வைத்திருந்த 2 பாா்சல்ளை தூய்மை பணியாளா்கள் கண்டெடுத்து சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனா்.அந்த பார்சல்களை அதிகாரிகள் பிரித்துப் பார்த்தபோது அவைகளுனுள் தங்கப் பசை இருந்ததை கண்டுபிடித்தனர். .இரு பாா்சல்களிலும்,960 கிராம் தங்கப்பசையை கைப்பற்றினா்.அதன் சா்வதேச மதிப்பு ரூ.42.8 லட்சம்.
இதையடுத்து சுங்கத்துறையினா் கடத்தல் தங்கத்தை விமானநிலைய குப்பை தொட்டிக்குள் மறைத்து வைத்துவிட்டு,தப்பியோடிய கடத்தல் ஆசாமிகளை சிசிடிவி காட்சிகள் மூலம் தேடி வருகின்றனா்.சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினா் நடத்திய சோதனைகளில் அடுத்தடுத்து ரூ.70 லட்சம் மதிப்புடைய 1.55 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு கடத்தல் பயணிகள் 2 போ் கைது செய்யப்பட்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu