சென்னை மழை பாதிப்புகளை கண்காணிக்க 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்

சென்னை மழை பாதிப்புகளை கண்காணிக்க 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்
X

பைல் படம்.

சென்னை மழை பாதிப்புகளை கண்காணிக்க மண்டல வாரியாக 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் மழை, வெள்ள மீட்பு பணிகளை கண்காணிக்க 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம் செய்து தமிழக அரச உத்தரவிட்டுள்ளது.

ஏ.கே.கமல் கிஷோர், கணேசன், சந்தீப் நந்தூரி, டி.ஜி.வினய், மகேஸ்வரி ரவிக்குமார், பிரதீப் குமார், சுரேஷ்குமார், எஸ்.பழனிசாமி, ராஜாமணி, எம்.விஜயலட்சுமி, சங்கர்லால் குமாவத், எல்.நிர்மல் ராஜ், எஸ்.மால்விழி, சிவஞானம், வீரராகவ ராவ் ஆகியோர் மண்டல வாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ரிப்பன் மாளிகையில் இன்று மாலை நடக்க உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்