சென்னை: 3நாளில் 1,221 தபால் ஓட்டு -ரூ.20கோடி பறிமுதல்!
தமிழகத்தில் ஏப்ரல் 6ந்தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முன்னதாக தபால் வாக்குப்பதிவு மார்ச் 26ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அதிகாரி ஜி.பிரகாஷ் தலைமையில் சென்னை அம்மா மாளிகையில் நேற்று நடந்தது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், சென்னையில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் அடிப்படை பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தலைப் பொறுத்தவரை ஒரு தொகுதியில் 16 வேட்பாளர்களுக்கு மேல் இருந்தால் கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும். கூடுதல் வேட்பாளர்கள் உள்ளதால், 7 ஆயிரத்து 181 துணை வாக்குப்பதிவு எந்திரங்களும், 537 விவிபேட் எந்திரங்களும் குலுக்கல் முறையில் தொகுதிக்கு ஒதுக்கும் முறை நடந்து முடிந்தது. இவை 31-ந்தேதிக்குள் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளுக்குப் பிரித்து அனுப்பப்படும்.
சென்னையில் (28ந்தேதி வரை) 1182 முதியோர்கள், 39 மாற்றுத்திறனாளிகள் என 1221 பேர் தபால் ஓட்டு அளித்துள்ளனர். தேர்தல் பறக்கும் படை மூலம் ஏறக்குறைய ரூ.20 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu