சென்னையில் 12 சிறிய பேருந்துகள் விரைவில் இயக்கம்: போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு

இதனால் சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை உயா்வதுடன் போக்குவரத்துத்துறைக்கு வருவாய் அதிகரிக்கும்

சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளுக்காக விரைவில் 12 சிறிய பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

சென்னை மாநகரப்போக்குவரத்துக் கழகத்தில் 210 சிறிய பேருந்துகள் உள்ளன. அதில் 66 சிறிய பேருந்துகள் மட்டுமே இயக்கப்பபட்டு வருகிறது. பயணிகளின் குறைவால் இழப்பு ஏற்பட்டு இதன் காரணமாக 144 சிறிய பேருந்துகள் இயக்காமல் நிறுத்தப்பட்டுள்ளன. முதற்கட்டமாக இம்மாதத்தில் 12 சிறிய பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதனால் சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை உயா்வதுடன் போக்குவரத்துத்துறைக்கு வருவாய் அதிகரிக்கும் என மாநகர போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா