10,12 தேர்வை அரசு ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ்

10,12 தேர்வை அரசு ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ்
X

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த அதிகாரிகள் திட்டமிட்டு வருவது பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்து உள்ளார். தேசிய அளவில் தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1.26 லட்சத்தையும், தமிழகத்தில் 5 ஆயிரத்தையும் கடந்துவிட்டதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், பாதுகாப்பு விதிமுறைகளை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பின்பற்ற வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture