ஒவ்வொரு தொகுதிக்கும் 100 ஆக்சிஜன் படுக்கைகள்: அமைச்சர் சேகர்பாபு

ஒவ்வொரு தொகுதிக்கும் 100 ஆக்சிஜன் படுக்கைகள்: அமைச்சர் சேகர்பாபு
X
சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் 60 கர்ப்பிணி பெண்கள் கொரோன சிகிச்சை பெற்று வருகின்றனர். -அமைச்சர் சேகர்பாபு.

சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் 60 கர்ப்பிணி பெண்கள் கொரோன சிகிச்சை பெற்று வருகின்றனர் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் ஆகியோர் எழும்பூரில் அமைந்துள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் சேகர்பாபு,

வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். இங்கு இருக்கக்கூடிய தாய் சேய் இருவரும் பாதுகாப்பாக இருக்கும் நிலையில் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது, கழிப்பறைகள் மிக சுத்தமாக வைக்கப்பட்டுள்ளது, தேவைப்படும் கழிவறை வசதிகளை உடனடியாக செய்து தரப்படும்..

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் 100 ஆக்சிஜன் படுக்கைகளை தயார் செய்து வருகிறோம். இன்னும் ஒரு வார காலத்தில் தமிழக முதல்வர் அதை துவக்கி வைப்பார் என்றார். மூன்றாவது அலை குழந்தைகள் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. அதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், அவர்களுக்கு தேவைப்படும் படுகைகளை தயார் செய்யுமாறு அறிவுரை வழங்கி உள்ளோம்.

7000 பெட்டிகள் வழங்கி இருந்தார்கள் அதை அதிகரித்து தர வேண்டும் என தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். இதனையொட்டி 50 ஆயிரம் பெட்டிகள் கூடுதலாக வந்து சேர்ந்துள்ளது தினமும் 20 ஆயிரம் பெட்டிகள் தருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் 60 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பத்து குழந்தைகளும் உள்ளனர், எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதி இல்லை அதனை ஏற்படுத்த உள்ளோம் அதற்காக ஒரு மாத அவகாசம் ஆகும். என்று தெரிவித்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!