பணம் பதுக்கியவர்களின் தகவல் எங்களிடம் உள்ளது: தேர்தல் அதிகாரி பரபரப்பு தகவல் !!

பணம் பதுக்கியவர்களின் தகவல் எங்களிடம் உள்ளது: தேர்தல் அதிகாரி பரபரப்பு தகவல் !!
X
சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளில் யாரிடம் எவ்வளவு பணம் உள்ளது என்ற தகவல் அனைத்தும் எங்களுக்கு தெரியும் என தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகளை அவ்வப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுக் கொண்டே வருகிறது.

அதன்படி மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளில் யார் யார் எவ்வளவு, எங்கே பணம் பதுக்கி இருக்கிறார்கள் என்ற அனைத்து தகவல்களும் எங்களிடம் உள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் இரவு நேரங்களில் மின்சாரம் அடிக்கடி போய் வருவதையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என அவர் கூறியுள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!