மூன்று நாட்கள் விடுமுறை: டாஸ்மாக் விற்பனை படுஜோர்..!

மூன்று நாட்கள் விடுமுறை: டாஸ்மாக் விற்பனை படுஜோர்..!
X

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. நாளை பிரச்சாரம் முடிவடைய உள்ளதால் அனைத்துக் கட்சியினரும் இறுதிக்கட்ட பரப்புரையில் விறுவிறுப்பாக உள்ளனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு நாளை முதல் வரும் 6ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படுகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாளை முதல் விடுமுறை என்பதால்,குடிமகன்கள் முன்கூட்டியே ஸ்டாக் வைத்துக்கொள்வதற்காக கடைகளுக்கு படை எடுப்பார்கள். அதனால் கூட்டம் அலைமோதும். விற்பனையும் ஜரூராக நடக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. குடிமகன்கள் எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் முண்டி அடித்து வாங்கிச் செல்வார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!