தேர்தலுக்கு பின் சென்னையில் மீண்டும் ஊரடங்கா..?

தேர்தலுக்கு பின் சென்னையில் மீண்டும் ஊரடங்கா..?
X
சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், தேர்தலுக்கு பின்பு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்கிற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பிரச்சாரம் என்ற பேரில் மக்கள் அதிகமாக கூடியதாலும் மாஸ்க் இன்றி வெளியே சென்றதாலும் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. தேர்தலுக்கு பிறகு மீண்டும் லாக் டவுன் அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தேர்தலுக்கு பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக அமல்படுத்தப்படுமென சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறையுடன் ஆலோசனை நடத்தினோம். அதன் முடிவில், மீண்டும் வீடுதோறும் சென்று காய்ச்சல் பரிசோதனை செய்ய முடிவெடுத்துள்ளோம். 6,000 பேர் வீடுதோறும் சென்று பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட உள்ளனர். ஏப்ரல் இறுதிக்குள் பாதிப்பு கட்டுக்குள் வரும் என நம்புகிறோம் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு சென்னையில் மெரினா கடற்கரை உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம். மக்கள் இந்த கசப்பான அனுபவத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். பொது இடங்களுக்கு கட்டாயம் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.

Tags

Next Story
ai healthcare technology