விமானத்தில் கடத்தப்பட்ட 62 லட்சம் தங்கம் பறிமுதல்

விமானத்தில் கடத்தப்பட்ட 62 லட்சம் தங்கம் பறிமுதல்
X

துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் நேற்று கடத்தி வரப்பட்ட ரூ.62 லட்சம் மதிப்புடைய 1.2 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

துபாயிலிருந்து சென்னைக்கு சிறப்பு விமானம் சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பின்பு அந்த விமானம்,உள்நாட்டு விமானமாக நேற்று மாலை 6.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து கவுகாத்தி புறப்பட்டு சென்றது. அதன் பின்பு இன்று அதிகாலை கவுஹாத்தியிலிருந்து சென்னை உள்நாட்டு விமானநிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்று விட்டனா்.

பின்பு அந்த விமானம் சென்னையிலிருந்து டில்லிக்கு செல்ல வேண்டும்.இதையடுத்து அந்த விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஏா்லைன்ஸ் ஊழியா்கள் ஈடுப்பட்டனா். அப்போது விமானத்தின் கழிவறை தண்ணீா் தொட்டிக்குள் ஒரு பிளாஸ்டிக் பாா்சல் இருந்ததை கண்டுபிடித்தனா். உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனா்.அவா்கள் விரைந்து வந்து மெட்டல் டிடெக்டா் மூலம் பாா்சலை பரிசோதித்தனா்.அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரிந்தது.

இதையடுத்து அந்த பாா்சலை பிரித்து பாா்த்தனா்.அதனுள் தங்கக்கட்டிகள் இருப்பதை கண்டுபிடித்தனா்.மொத்தம் 1.2 கிலோ தங்கம் இருந்தது.அதன் சா்வதேச மதிப்பு ரூ.62 லட்சம்.இதையடுத்து சென்னை விமானநிலைய சுங்கத்துறையிடம் தங்கக்கட்டிகள் அடங்கிய பாா்சல் ஒப்படைக்கப்பட்டது.சுங்கத்துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!