சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.50 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.50 லட்சம் தங்கம் பறிமுதல்
X

துபாயிலிருந்து சென்னை வந்த சிறப்பு விமானத்தில் கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புடைய ஒரு கிலோ தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, ராமநாதபுரத்தை சோ்ந்த பயணி ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

துபாயிலிருந்து சிறப்பு விமானம் சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தது.அதில் வந்த பயணிகளை விமானநிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது ராமநாதபுரத்தை சோ்ந்த அபுபக்கா் சித்திக்(38) என்ற பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை நிறுத்தி சோதனையிட்டனா். அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 400 கிராம் தங்க பேஸ்ட்டை பறிமுதல் செய்தனா்.

அதோடு விமானத்தை சோதனையிட்டபோது, ஒரு இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த 600 கிராம் தங்கக்கட்டிகளையும் பறிமுதல் செய்தனா். மொத்தம் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் சா்வதேச மதிப்பு ரூ.50 லட்சம் என கூறப்படுகிறது. இதையடுத்து தங்கத்தை கடத்தி வந்த பயணி அபுபக்கா் சித்திக்கை கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

Tags

Next Story